Sunday, February 26, 2006

ஜணனம் - மரணம்

அன்மையில் விசுவின் அரட்டை அரங்கம் பாரத்தேன். ஒரு இளைஞர் கூறுகிறhர்

முட்டை உள்ளிருந்து உடைந்தால் ஜணனம்
வெளியிருந்து உடைந்தால் (உடைக்கபட்டால்) மரணம்

It apparently conveys that we have to develop from within (athma/soul/self ) to make our life complete and meaningful. If we are influenced or conditioned by the external matter or issues (either it be relations / material aspects ) that life is equivalent to death.

Sunday, February 19, 2006

லஷ்மி

லஷ்மிக்கு வயது பத்து. என்னுடையவளாகி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. முதல் வருடம் நன்றhக கவனித்துக் கொண்டேன். சுறுசுறுப்பாக சலனமில்லாமல் இயங்க உயர்தர வகை ஊட்டம்தான். பளபளவென்று இல்லாவிடிலும் அழகான மேனியும் தோற்றமும். அவளுடைய கோரிக்கைகள் மிகவும் குறைவானது. என்னால் சமாளிக்க முடிந்தது. பிறகு வேறு மாநிலம் மாறவேண்டியிருந்தது. புது இடம் சென்றவுடன் லஷ்மியின் இயக்கத்தில் மாறுதல் தோன்றியது. எனக்கும் அவளை கவனிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. இடம் புதிது. மக்கள் புதிது. நிபுணர்கள் அவ்வளவு நன்றhக அமையவில்லை. ஒவ்வொரு வாரமும் ஒரு சங்கடத்திற்காக நிபுணரிடம் காண்பித்தேன். கடைசியில் நம்பகமான நிபுணர் ஒருவரைப் பார்த்ததில் ஒரு பெரிய பழுதை பொருத்தவேண்டியிருந்தது. நல்ல செலவு செய்து
பொருத்தினேன். லஷ்மியின் இயக்கத்தில் நல்ல முன்னேற்றம். எனக்கும் மகிழ்ச்சி.





ஒரு வாரம் கழித்து மாநில சாலை அபாய பரிசோதனையில் எந்த தடையுமின்றி தேர்வுப் பெற்று விட்டாள் லஷ்மி.


Monday, February 13, 2006

இரசாயன பொறியியலாளர்கள் உருவான வகுப்பறை

காலை ஒன்பது மணி - 48 பேர் கொண்ட அறை ;
பேருந்து தடங்கலெனச் சாக்கு கூறி பதற்றத்துடன் நுழைவான் லட்சுமி நரசிம்மன்;
அவனையொட்டிக்; கொண்டு அதே காரணத்தோடு நுழைவான் பைக்கில் பறந்து வந்த அருள்;
நேரம் கழித்து வந்தும் தப்பித்தவர்களையெண்ணி குமுறுவான் டிபார்ட்மெண்டு திறக்குமின்னே வந்த மகேஷ்;
எந்தக் கவலையுமின்றி மேசைக்கீழ் மறைத்து வைத்து ஜp.ஆர்.இ படிப்பாள் சோணh
தான் இவ்வறையில் தவிப்பதற்கு காரணம் ஹெச்.ஓ.டி எனச் சாதிப்பான் நிர்மல் ;
தேநீர் இடைவேளையில் சென்று கடலைப்போட ஜுனியர் வகுப்பு; தேர்வு செய்வான்; கமலேஷ் ;
கமல்ஹhசனுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையை அளந்து கொண்டிருப்பான் ஈஷ்வர் ;
இவர்களுக்கள்ளாம் எவன் கல்லுரியில் இடம் கொடுத்தான் எனப் பார்வையாலே அலுத்துக்கொள்வாள் மஞ்சு;
கருப்புப் பலகையில் தோன்றும் வெள்ளையெழுத்துக்களை ஒன்றுவிடாமல் புத்த்கத்தில் பதிவுச்செய்துக் கொள்வார்கள் பாஸ்கரனும் கார்த்திகேயனும்;
அப்பொழுதே அப்புத்தகங்களை சிராக்ஸ் செய்ய முடிவுசெய்துவிடும் ஒரு கூட்டம் ;
மணி ஒன்பது ஐம்பது – “பரோட்டா குருமா மணமும்”; “கைத்தவறி கீழே விழுந்த டிபின் பாக்ஸ் மூடி ஏற்ப்படுத்தியச் சத்தமும்” கடமையாற்றிக் கொண்டிருக்கும் அந்நியன் வெளியேற சமிக்ஞைகள்;
பாடத்தை கோட்டைவிட்டு இவையனத்தையும் கவனித்தவன் நான்.


----- கார்த்திக் ஜெ.
எண்ணங்களை பதிக்க விரும்புகிறேன்
வார்த்தைகளை அல்ல