Friends
Most of us would have seen the movie "Anbe Sivam"(Kamalhasan - Madhavan). I have listened to the "Anbe sivam" song several times but recently spent time understanding the lyrics deeply and wrote it. Here is the song in tamil for those who like to read. this song is written by 'Kaviyarasu' Vairamuthu. Especially pay attention to the bold lines!
யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்.
நாத்திகம் பேசும் நல்லவர்க்கோ அன்பே சிவமாகும்.
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் நின்றுவிடும்.
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்.
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
அன்பின் பாதை சேர்ந்தவர்க்கு முடிவே இல்லையடா.
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
Friday, November 03, 2006
Sunday, October 22, 2006
மரம்
ஆய்வுக்கூடத்தில் இராசயன கலவையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில்,கண்ணாடி சன்னல் வழியே சற்று
திரும்பி பார்வைக்குத் தென்பட்ட இயற்கையை ரசிக்கத் தொடங்கினேன். வரிசையாக தெரிந்த ஆறேழு மரங்களில்,ஒன்று மட்டும் இலைகளை இழந்து மொட்டையாக காணப்பட்டது. மற்ற மரங்களெல்லாம்,பல வண்ணங்களில் அலங்காரத்தோடு தோற்றமளித்தது. பருவத்தை நிர்ணயிக்கும் தேவதையின் பாரபட்சத்தை ஒரு நொடி வெறுத்தேன்.உறவுகளின்றி தோற்றமளித்த மரம் என் அனுதாபத்திற்கு ஆளானது. இராசயன கலவை ஆராய்ச்சியில் மனம் லயிக்காமல்,அந்த மரத்தின் நிலமையை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தேன். சிறிது நேரம் கழித்து அது அந்த மரத்தின் "விதி" என்று தீர்மானம் செய்து என் அலுவலை பார்க்க சென்றுவிட்டேன்.
மாலை வேலை முடித்து செல்லுகையில்,ஒரு குரல் என்னை அழைத்தது. Do you have a minute என்று கூறி என் பதிலுக்கு காத்திருக்காமல் பேசத் தொடங்கியது: "மதியம் என்னை பார்த்து அனுதாபப்பட்டதிற்கு நன்றி.ஆனால் அது தேவையில்லை; வருடம் ஒரு முறை, வெளித் தோற்றத்திற்கு மட்டும் உதவும் அம்சங்களை துறந்து, நிர்வானமாகி,தனிமையாகி, என்னுடையதாகிய வேர் மற்றும் மூடப்பட்டிராத கிளைகளோடு வாழ்வதை நான் மிகவும் விரும்புகிறேன். முடிந்தால் ஒரு முறை அவ்வாழ்க்கையை வாழ முயற்சி செய்." Have a Nice Evening !
சற்று அன்னாந்து பார்த்தேன். மொட்டை மரத்தை காணவில்லை.

Saturday, September 30, 2006
மனம்
இது ஒரு கர்ப்பாசயம்
நொடிக்கு நொடி பல ஆசைகளின் ஜணனம்
சில ஆசைகள் சுகப்பிரசவம்
இன்னும் சில அவஸ்தை பிரசவம்
பல கருவிலேயே மரணம்.
நொடிக்கு நொடி பல ஆசைகளின் ஜணனம்
சில ஆசைகள் சுகப்பிரசவம்
இன்னும் சில அவஸ்தை பிரசவம்
பல கருவிலேயே மரணம்.
"திருக்குறள்"
Recently I have started posting one "திருக்குறள்" every day in the following website.
US Tamilians
Please visit and read if you are interested.
US Tamilians
Please visit and read if you are interested.
Tuesday, March 21, 2006
அபகரிப்பு
தினசரி வாழ்க்கையின் அடிப்படை தேவை என்பதை காரணமாக்கி என் வரவுக்கேற்ப ஒரு கார் வாங்கினேன்.நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பேசுவதற்கு இன்ஸ்ட்டேட் காலிங் கார்ட் கட்டுபடி ஆகவில்லை என சாக்கு கூறி செல்-போனை பற்றினேன். காரில் செல்லும் பொழுது தொடராது இசை வேண்டுமென mp3-பிளேயர் பொருத்தினேன். நாளுக்கு நாள் காரோடு உறவாடும் நேரம் அதிகரிக்க செல்போன் செல்லமாய் கோபித்துக் கொள்ள, ஹெட்செட் வாங்கினேன். வெகு தூரப்பயணங்களில் போது செல்போனிற்கு சக்தி ஊட்ட கார் சார்ஜெர் வாங்கி கார்க்கும் செல்போனிற்கும் நட்பு பிறப்பித்தேன். இப்படியாக செய்து, தொழில் நுட்பத்தால் பிறந்த கருவிகள் என் தனிமையை அபகரித்து விட்டன.

Tuesday, March 14, 2006
தமிழில் பதிக்க
Sam அவர்களின் பதிவு மூலம் திரு.கோபி அவர்களின் யுனிகோடு கன்வெர்ட்டர் கண்டேன்.தமிழில் எழுதுவது சுலபமாகிவிட்டது.கோபி அவர்களுக்கு கோடி நன்றி. உங்களுக்கும் நன்றி sam.
http://www.higopi.com/ucedit/Tamil.html

Saturday, March 11, 2006
ஆடை
உன்னை தினமும் கவனித்து வருகிறேன். நாம் இருவரும் தினமும் இரண்டு மணி நேரமாவது ஒட்டி உறவாடுகிறோம்.. நீ இரண்டு வாரங்களுக்கு குறைந்து, ஒரு முறை அணிந்த ஆடையை உடுத்துவதில்லை. மாதத்தில் இரு முறையாவது புது துணியின் வாசனை முகர்கிறேன். நான் கட்டி வந்த அதே ஆடையுடன், ஒன்றரை வருடம் உன்னுடன் காலம் கடத்தி விட்டேன். சிந்தித்து பார். உனக்கு சரியென படுவதைச் செய்.
இதை கேட்டவுடன் அடுத்த நிமிடம் காரை சூப்பர் மார்க்கெட்க்கு செலுத்தினேன். ஆட்டோ கேர் பகுதிக்குச் சென்று கார் சீட் கவர் வாங்கி, குற்ற உணர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் வீடு வந்தேன்.
Wednesday, March 08, 2006
இரைச்சல்
இன்று காலை கண் விழித்ததிலிருந்து அலுவலுக்குப் புறப்படுவதற்கு முப்பது நிமிடங்கள தான் இருந்தது. விழித்த சற்று நேரத்திலிருந்தே உலகமே ஒரே இரைச்சலாக இருப்பதாக ஒரு உணர்வு.அதை தவிர்க்க லேப்டாபில் ராகா 2005சார்ட் பஸ்டர்ஸ் தொடக்கினேன். ஒலியை உச்சமாக வைத்தும் உலகத்தின் இணக்கமற்ற இரைச்சலிலிருந்து விடுதலை இல்லை. பின்பு குளித்து முடித்து ஷின்கான்சென்(Shinkansen) தடத்தில் செல்லும் ரயில் வேகத்தில் இறைவழிபாட்டை முடித்து உடுத்தி கிளம்பினேன்.
“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.”
என்ற குறள் நினைவு வர அதை தவறாக எனக்கு சாதகமாக இந்த இரைச்சலான சூழலுக்கு தொடர்பு செய்து காலை சாப்பாடு உண்ணாமல் காரை நோக்கி விரைந்தேன். காரில் ஏறியவுடன் புதிதாய் பொருத்திய எம்.பி.3பிளேயரை தட்டி ஒலியைப் பெருக்கினேன்.மனதில் பல சிந்தனைகள், வருத்தங்கள், இரைச்சல்கள். அலுவலகம் சென்றடைந்து காரை நிறுத்தி விட்டு அடுத்த எட்டு மணி நேரத்திற்கு எனக்கு அடைக்கலம் தரும் அறை நோக்கி நடந்தேன். ஒரு மணி நேரமாக இருந்த இரைச்சல் இப்பொழுது இல்லை. ஒரு நிமிடம் சிந்தித்தேன் இரைச்சல் உலகத்திலிருந்து வந்ததா இல்லை என் உள்மனதின் பலவித யோசனைகளால் வந்ததா?
Subscribe to:
Posts (Atom)