Tuesday, March 21, 2006

அபகரிப்பு

தினசரி வாழ்க்கையின் அடிப்படை தேவை என்பதை காரணமாக்கி என் வரவுக்கேற்ப ஒரு கார் வாங்கினேன்.நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பேசுவதற்கு இன்ஸ்ட்டேட் காலிங் கார்ட் கட்டுபடி ஆகவில்லை என சாக்கு கூறி செல்-போனை பற்றினேன். காரில் செல்லும் பொழுது தொடராது இசை வேண்டுமென mp3-பிளேயர் பொருத்தினேன். நாளுக்கு நாள் காரோடு உறவாடும் நேரம் அதிகரிக்க செல்போன் செல்லமாய் கோபித்துக் கொள்ள, ஹெட்செட் வாங்கினேன். வெகு தூரப்பயணங்களில் போது செல்போனிற்கு சக்தி ஊட்ட கார் சார்ஜெர் வாங்கி கார்க்கும் செல்போனிற்கும் நட்பு பிறப்பித்தேன். இப்படியாக செய்து, தொழில் நுட்பத்தால் பிறந்த கருவிகள் என் தனிமையை அபகரித்து விட்டன.

2 comments:

Sam said...

இது ஆரம்பம்தான். போகப் போக பாருங்கள்.
அன்புடன்
சாம்

Anonymous said...

உயிர் இல்லாத பொருட்கலுக்கு உரவையும் உயிரையும் கொடுத உன் முயர்சி பெஷ் பெஷ் !!

Venkataraman