Wednesday, March 08, 2006
இரைச்சல்
இன்று காலை கண் விழித்ததிலிருந்து அலுவலுக்குப் புறப்படுவதற்கு முப்பது நிமிடங்கள தான் இருந்தது. விழித்த சற்று நேரத்திலிருந்தே உலகமே ஒரே இரைச்சலாக இருப்பதாக ஒரு உணர்வு.அதை தவிர்க்க லேப்டாபில் ராகா 2005சார்ட் பஸ்டர்ஸ் தொடக்கினேன். ஒலியை உச்சமாக வைத்தும் உலகத்தின் இணக்கமற்ற இரைச்சலிலிருந்து விடுதலை இல்லை. பின்பு குளித்து முடித்து ஷின்கான்சென்(Shinkansen) தடத்தில் செல்லும் ரயில் வேகத்தில் இறைவழிபாட்டை முடித்து உடுத்தி கிளம்பினேன்.
“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.”
என்ற குறள் நினைவு வர அதை தவறாக எனக்கு சாதகமாக இந்த இரைச்சலான சூழலுக்கு தொடர்பு செய்து காலை சாப்பாடு உண்ணாமல் காரை நோக்கி விரைந்தேன். காரில் ஏறியவுடன் புதிதாய் பொருத்திய எம்.பி.3பிளேயரை தட்டி ஒலியைப் பெருக்கினேன்.மனதில் பல சிந்தனைகள், வருத்தங்கள், இரைச்சல்கள். அலுவலகம் சென்றடைந்து காரை நிறுத்தி விட்டு அடுத்த எட்டு மணி நேரத்திற்கு எனக்கு அடைக்கலம் தரும் அறை நோக்கி நடந்தேன். ஒரு மணி நேரமாக இருந்த இரைச்சல் இப்பொழுது இல்லை. ஒரு நிமிடம் சிந்தித்தேன் இரைச்சல் உலகத்திலிருந்து வந்ததா இல்லை என் உள்மனதின் பலவித யோசனைகளால் வந்ததா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment