Saturday, March 11, 2006

ஆடை





உன்னை தினமும் கவனித்து வருகிறேன். நாம் இருவரும் தினமும் இரண்டு மணி நேரமாவது ஒட்டி உறவாடுகிறோம்.. நீ இரண்டு வாரங்களுக்கு குறைந்து, ஒரு முறை அணிந்த ஆடையை உடுத்துவதில்லை. மாதத்தில் இரு முறையாவது புது துணியின் வாசனை முகர்கிறேன். நான் கட்டி வந்த அதே ஆடையுடன், ஒன்றரை வருடம் உன்னுடன் காலம் கடத்தி விட்டேன். சிந்தித்து பார். உனக்கு சரியென படுவதைச் செய்.


இதை கேட்டவுடன் அடுத்த நிமிடம் காரை சூப்பர் மார்க்கெட்க்கு செலுத்தினேன். ஆட்டோ கேர் பகுதிக்குச் சென்று கார் சீட் கவர் வாங்கி, குற்ற உணர்வு நீங்கி மகிழ்ச்சியுடன் வீடு வந்தேன்.

2 comments:

Sam said...

என்னங்க உங்க காரை உங்களுக்கு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?

அருமை

அன்புடன்
சாம்

Karthik said...

@Sam
விமரிசனத்திற்கு நன்றி. எனது காருக்கு என்னை பிடிக்கும்.