Tuesday, February 20, 2007

ஈகை

ஆர்குட் மூலம் உருவாகி இயங்கி வரும் "அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்" இயக்கம், http://www.orkut.com/Community.aspx?cmm=19027986
ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் வாழும் ஏழ்மையான நபர் ஒருவர்க்கு உதவி செய்ய முடிவு செய்தது. அதற்காக "ஈகை" எனும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

எங்களின் அடிப்படை வேண்டுகோள் :

தினம் 3.3 சென்ட்ஸ்(cents) என்ற கணக்கில் மாதம் 1 டாலர் நன்கொடை அளியுங்கள்.

கீழே குறியிட்டுள்ள வலை தொடர்பை பற்றுக

http://www.karthikjayaraman.com/egai.php


க்ரிடெட் கார்ட் (credit card) நுட்பம் சம்பந்தபட்ட விஷயங்களால், தற்பொழுது குறைந்த அளவாக ஐந்து டாலர்கள் நன்கொடை அளிக்க வேண்டும்.

பிறகு ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் நன்கொடை அளியுங்கள்.

தங்களால் இயலுமானால் ஒவ்வொரு மாதமும் ஐந்து டாலர்கள் அல்லது ஐந்து டாலர்களுக்கு மேல் நன்கொடை அளியுங்கள்.

நன்கொடை நடவடிக்கைகள் அனைத்தையும் ,எங்களால் முடிந்த அளவு தங்களுக்கு ஈ-மெயில் மூலம் தெரிவிப்போம்.

இந்த மாதம் நாம் உதவி செய்ய போகும் நபர்:

http://saverevathy.blogspot.com/


நன்றி
"அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்"

Wednesday, January 31, 2007

என் அந்நியனின் பார்வையில்

Note: Originally written in English by ANKEETA; translated in Tamil by Kaarththik.



என் அந்நியனின் பார்வையில்

முத்தமிட்டேன் அவன்
ஈர உதடுகளின் பேசாத ரகசியத்தை
பாதுகாப்பான அவன் கைகளில் சாய்ந்தபடி,
இயல்பிழந்த காதலி போல்
ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி.

படபடக்கும் பட்டாம்பூச்சிகள் கிசுகிசுபூட்டின
என்னுள் இருந்த கேலிக்கை வேட்கையை,
அவன் சிரிப்பில் வெட்கப்பட்டு
மழலையாக சிரித்து முறைக்கையில்.

மெதுவாக..
இரகசியமாக பதுங்கினேன் அவன் உலகத்தில்
புதிய சூரியவெளிச்சத்தோடு,
துயர் மழையில்.


அவனுடைய விரல்களை பின்னினான்
என் விரல்களோடு,
மேலும் என் ஆத்மாவின் வாசனையை
மென்மையாக சுவாசித்தான்
என் துயர நினைவுகளை அழிப்பதற்கே.


ஒரு மென்மையான இடைவெளி பொழுதில்
இருவரின் சுவாசமும் உறைந்தன
"நான் உன்னை நேசிக்கிறேன்" என மொழிவதற்கு.
ஒரு நொடி
நாங்கள் வாழ்ந்தோம்,நம்பிக்கையின் போர்வையில்
கட்டி பிடித்துக்கொண்டு தொலைந்த காதலர்களை போல்.

காம இச்சையுள்ள சிறு முத்துக்கள் தெளித்தன
என் சிறிய இதயத்தில்,
மாலை பொழுது, அன்பின் வண்ணங்களில்
உருகும் வரை.

நான் மூழ்கிக்கொண்டே போனேன்
நிரந்தரமாக
என் அந்நியனின் பார்வையில்

All rights reserved, © ANKEETA.



In My Stranger's Eyes




I kissed the silent whispers
from his molten lips,
lying safe in his arms.
like a helpless lover
breathing a deep sigh of relief.

Bubbling butterflies tickled
the mischief inside me.
as I giggled and stared
at the blush of his smile

Slowly...
I sneaked into his world
with a new sunlight
in bitter rains

while he laced his fingers
in mine
and softly touched the scent
of my bosom
only to erase my dark memories

Within a tender pause
our breaths froze
to say, "I love you"
A moment
We lived, on the bed of hopes
cuddling like lost lovers.

sensual trinkets spilled
in my little heart
till the dusk melted
in colors of love,

I kept drowning
forever
in my stranger's eyes

All rights reserved, © ANKEETA

Friday, January 26, 2007

திறவுகோல்

மரம் செடி கொடிகள் செழிக்க, எதிர்பார்ப்பின்றி
அன்பு கிரணங்கள் நீட்டும் தன்னலமற்ற ஆதவனைப்போல்;
வறுமையில் வாழும் உடன்பிறந்தோர் மேம்பட‌,
இரும்பு பெட்டியின் சாவியை நீட்ட வேண்டும்
இம்மண்ணின் செல்வந்தர்கள்!

Friday, November 03, 2006

அன்பே சிவம்

Friends
Most of us would have seen the movie "Anbe Sivam"(Kamalhasan - Madhavan). I have listened to the "Anbe sivam" song several times but recently spent time understanding the lyrics deeply and wrote it. Here is the song in tamil for those who like to read. this song is written by 'Kaviyarasu' Vairamuthu. Especially pay attention to the bold lines!

யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்.
நாத்திகம் பேசும் நல்லவர்க்கோ அன்பே சிவமாகும்.

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!


யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
வாழ்வே தவம்! அன்பே சிவம்!
இதயம் என்பது சதை தான் என்றால் எரிதழல் நின்றுவிடும்.
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்.

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!


யார் யார் சிவம்? நீ நான் சிவம்!
அன்பின் பாதை சேர்ந்தவர்க்கு முடிவே இல்லையடா.
மனதின் நீள‌ம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா.

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம!
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்!

Sunday, October 22, 2006

மர‌ம்

ஆய்வுக்கூடத்தில் இராசயன கலவையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில்,கண்ணாடி சன்னல் வழியே சற்று
திரும்பி பார்வைக்குத் தென்பட்ட இயற்கையை ரசிக்கத் தொடங்கினேன். வரிசையாக தெரிந்த‌ ஆறேழு மரங்களில்,ஒன்று மட்டும் இலைகளை இழந்து மொட்டையாக காணப்பட்டது. மற்ற மரங்களெல்லாம்,பல வண்ணங்களில் அலங்காரத்தோடு தோற்றமளித்தது. பருவத்தை நிர்ணயிக்கும் தேவதையின் பாரபட்சத்தை ஒரு நொடி வெறுத்தேன்.உறவுகளின்றி தோற்றமளித்த மரம் என் அனுதாபத்திற்கு ஆளானது. இராசயன கலவை ஆராய்ச்சியில் மனம் லயிக்காமல்,அந்த மரத்தின் நிலமையை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தேன். சிறிது நேரம் கழித்து அது அந்த மரத்தின் "விதி" என்று தீர்மானம் செய்து என் அலுவலை பார்க்க சென்றுவிட்டேன்.

மாலை வேலை முடித்து செல்லுகையில்,ஒரு குரல் என்னை அழைத்தது. Do you have a minute என்று கூறி என் பதிலுக்கு காத்திருக்காமல் பேசத் தொட‌ங்கியது: "மதியம் என்னை பார்த்து அனுதாபப்பட்ட‌திற்கு நன்றி.ஆனால் அது தேவையில்லை; வருடம் ஒரு முறை, வெளித் தோற்றத்திற்கு மட்டும் உதவும் அம்சங்களை துறந்து, நிர்வானமாகி,தனிமையாகி, என்னுடையதாகிய வேர் மற்றும் மூடப்பட்டிராத கிளைகளோடு வாழ்வதை நான் மிகவும் விரும்புகிறேன். முடிந்தால் ஒரு முறை அவ்வாழ்க்கையை வாழ முயற்சி செய்." Have a Nice Evening !


சற்று அன்னாந்து பார்த்தேன். மொட்டை மரத்தை காணவில்லை.

Saturday, September 30, 2006

மனம்

இது ஒரு கர்ப்பாசயம்
நொடிக்கு நொடி பல ஆசைகளின் ஜணனம்
சில ஆசைகள் சுகப்பிரசவம்
இன்னும் சில அவஸ்தை பிரசவம்
பல கருவிலேயே மரணம்.

"திருக்குற‌ள்"

Recently I have started posting one "திருக்குற‌ள்" every day in the following website.

US Tamilians
Please visit and read if you are interested.

Tuesday, March 21, 2006

அபகரிப்பு

தினசரி வாழ்க்கையின் அடிப்படை தேவை என்பதை காரணமாக்கி என் வரவுக்கேற்ப ஒரு கார் வாங்கினேன்.நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பேசுவதற்கு இன்ஸ்ட்டேட் காலிங் கார்ட் கட்டுபடி ஆகவில்லை என சாக்கு கூறி செல்-போனை பற்றினேன். காரில் செல்லும் பொழுது தொடராது இசை வேண்டுமென mp3-பிளேயர் பொருத்தினேன். நாளுக்கு நாள் காரோடு உறவாடும் நேரம் அதிகரிக்க செல்போன் செல்லமாய் கோபித்துக் கொள்ள, ஹெட்செட் வாங்கினேன். வெகு தூரப்பயணங்களில் போது செல்போனிற்கு சக்தி ஊட்ட கார் சார்ஜெர் வாங்கி கார்க்கும் செல்போனிற்கும் நட்பு பிறப்பித்தேன். இப்படியாக செய்து, தொழில் நுட்பத்தால் பிறந்த கருவிகள் என் தனிமையை அபகரித்து விட்டன.